Uses and Benefits of Fibre-rich food

Hero image

நார்ச்சத்து என்றால் என்ன?

  • நார்ச்சத்து என்பது நமது உடலால் ஜீரணிக்க முடியாத கார்போஹைட்ரேட் அல்லது ஸ்டார்ச் ஆகும்.
  • உங்கள் செரிமான மண்டலத்தின் கழிவுகளை வெளியேற்றும் கருவியாக செயல்படுகிறது.
  • தாவர உணவுகளில் மட்டுமே அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது.
  • பழங்கள், காய்கறிகள் மற்றும் முழுத்தானியங்களில் நார்ச்சத்து பொதுவாகக் காணப்படுகிறது.

நார்ச்சத்தில் இரண்டு வகை !

  • கரையக்கூடிய நார்ச்சத்து
  • கரையாத நார்ச்சத்து

நார்ச்சத்து எப்படி கிடைக்கும்? >(ஒரு நாளைய தேவை : 24-30 கிராம்)

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை , கேழ்வரகு, தினை , வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்வது அவசியம். இது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கபட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்).

  • வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் , பாகற்காய் , புடலங்காய் , அவரைக்காய் , கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், கீரைகள்.
  • பொட்டுக்கடலை ,கொண்டைக்கடலை , மொச்சை போன்ற பருப்புகள்.
  • ஆரஞ்சு, கொய்யா , மாதுளை , ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை , மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம் .
  • தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • காஃபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், மோர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.
  • இனிப்பு வகைகளையும், கொழுப்பு உணவுகளையும், பொரித்த பண்டங்களையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • துரித உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • தினமும் நடைப்பயிற்சி செய்யவேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள், வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
  • மலம் கழிப்பதற்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாகக் குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக்கூடாது. கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள். காலை நேரமானாலும் சரி, மாலை நேரமானாலும் சரி… தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.
  • புகைப்பிடிக்கக் கூடாது. மது அருந்தக்கூடாது.

ஒருமுறை ஒரு நோய் வந்தால் , வந்த நோய் என்ன காரணத்தால் வந்தது என்று அறிந்துகொண்டு, அந்த முறையில் மீண்டும் அந் நோய் வராமல் தடுக்கின்ற அறிவும் அது சார்ந்த கல்வியும் பெற்றாக வேண்டும்.       

“பணச்சிக்கலை விட மலச்சிக்கலே ஆபத்தானதாகும். மலச்சிக்கல் ஒன்றே ஆதி நோய்.. அதன் பின்னால் வருபவையே மீதி நோய்கள் !”

Blogs & Article