டயட் பல தோல்விகள் சில பாடங்கள்!

உடல் எடைக்குறைப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது டயட்டிங்.

பொதுவாக டயட்டிங் என்றால் சாப்பிடும் அளவைக் குறைப்பது, எண்ணெய்ப் பலகாரங்களைத் தவிர்ப்பது, அரிசி உணவுகளைத் தவிர்த்து சப்பாத்தி போன்ற உணவுக்கு மாறுவது…

டயட் ஃபெயில்டு (Diet Failed) ஏன்?

பருமனாக இருக்கும் பெரும்பாலானோர் ஏதோ ஒருவகையில் டயட்டில் இருந்திருப்பீர்கள்.பெரிய பெரிய பிரபலங்களுக்கு டயட்டீசியனாக இருப்பவரிடம் சென்று பார்த்தாலும் சரி, டயட் ஃபெயில்டு (Diet Failed) பிரச்னை இருக்கவே செய்யும்.

காரணம்… எல்லா டயட்டிசியனும் எடையைக் குறைப்பதற்கு ஒரு டிப்ஸ் கொடுப்பார்கள்.வெற்றி என்பது 3 மாதத்தில் 10 கிலோ குறைப்பதா? இல்லை. அதற்காக எடை குறையாது என்று சொல்லவில்லை. உடல் எடையைக் குறைப்பதோடு, தொடர்ந்து உடலைச் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.

பெரும்பாலும் உட்கொள்ளக்கூடிய குளூக்கோஸில் புரோட்டீன் கலோரி, ஃபேட் கலோரி இருக்கிறது. நாம் அடிப்படையான கலோரிகளைக் குறைக்கும்போது உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு உருக ஆரம்பிக்கும். மேலும் சிறிது உடல் எடை குறையும்.

  • டயட் எனும் பெயரில் எதையும் சாப்பிடாமல் இருந்தால், நமது கல்லீரலில் இருக்கக்கூடிய கிளைகோஜன் குளூக்கோஸாக மாறி நம் உடலின் செயல்பாட்டையே பாதிக்கும்.
  • நம் உடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இருக்கக்கூடிய கொழுப்பு உருகி குளூக்கோஸ் மற்றும் லைப்போலைசிஸை உருவாக்கும்.
  • இதில் குளுக்கோஸை உருவாக்கும்போது, உடல் சாதாரணமாகச் செயல்படும். 2 – 4 வாரம் வரை நம் உடலில் இருக்கும் கொழுப்பிலிருந்தே குளுக்கோஸை உருவாக்க முடியும். நாம் பட்டினியாக இருந்தாலும்கூட நான்கு வாரங்களுக்கு
    எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
  • 6 வாரங்களுக்குப் பட்டினியாக இருந்தாலும் கூட நம் உடல் செயல்படும்; உயிர் வாழவும் முடியும். தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
  • ஆனால், சாப்பிடாமல் இருந்து குறைந்துகொண்டேபோகும்
    உடல் எடை, ஒரு கட்டத்துக்கு மேல் குறையாமல், நின்றுவிடும்.
diet-disorder

குறைத்த பிறகு, “பரவாயில்லையே 5 கிலோ குறைத்துவிட்டோமே” என்று நினைத்து சாதாரண உணவு முறைக்கு வந்துவிடுவோம். முன்னர் சாப்பிட்ட அளவிற்கு மேல் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் எடை சராசரியைவிடக் கூடுதலாக நேரிடும். நாம் மேற்கொள்ளும் சில தவறான டயட் காரணமாக 10 மடங்கு இருந்த உடல் எடை 12 மடங்காக மாறும். அதனால், டயட்டில் இருக்கும் பலரும் ஆரம்பத்தில் இருந்த உடல் எடையைவிடப் பிறகு மிகவும் பருமனாகக் காணப்படுவார்கள். எடையைக் குறைக்காமல் இருந்திருந்தாலே பழைய உடல் எடையில் இருக்கலாம். டயட் என்ற பெயரில் நம் உடலைக் கெடுத்துக்கொள்கிறோம். டயட்டில் இருந்தால் கடைசி வரை முறையானஅதே உணவு முறையைக் கையாள வேண்டும். அது முடியாதெனில் டயட்டில் இருக்காதீர்கள்!

டயட் எனும் பெயரில் எதையும் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? நமது கல்லீரலில் இருக்கக்கூடிய கிளைகோஜன் குளூக்கோஸாக மாறி நம் உடலின் செயல்பாட்டையே பாதிக்கும்.

Direct Visit to Hospital

Fill out the form below, and we will be in touch shortly.
Details
Preferred Date